thangkuthaiyya thangkuthaiyya ungka kirupai

தாங்குதைய்யா தாங்குதைய்யா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாங்குதைய்யா தாங்குதைய்யா உங்க கிருபை
என்னை ஏந்துதைய்யா சுமக்குதைய்யா உங்க கிருபை
அலைகள் வந்தாலும் புயல்கள் மோதினாலும்
அமைதி படுத்துதைய்யா உங்க கிருபை
1.தாயின் கருவிலே வெளிப்படும் போதே
உமது சார்பினில் விழுந்தேனைய்யா -2
என் கிட்ட வந்து தொட்டு பார்த்து அணைத்துக்கொண்டவரே
ஒரு முத்தம் தந்து சொத்து என்று சேர்த்து கொண்டவரே-2
உம் பாசத்திற்கு எல்லை இல்லையப்பா-2
2.பட்டமரமாய் நான் இருந்தேன்
பச்சை மரமாய் உயிர் கொடுத்தீரைய்யா-2
கிளை நறுக்கி களை பிடுங்கி என்னை வளர்த்தீரே
அந்த தண்ணீரண்டை கொண்டு வந்து அமர வைத்தீரே -2
என் ராசாவே உம்மை துதிக்கிறேன் -2
3.கர்த்தாவே உம் வருகைக்காய் காத்திருப்பேன் கண் விழித்திருப்பேன் -2
எக்காள சத்தம் கேட்குமென்று காத்திருக்கிறேன்
மருரூபமாகி பறந்து செல்ல பார்த்திருக்கிறேன் -2
என் இயேசுவே எப்ப வருவீரோ -2
தாங்குதைய்யா தாங்குதைய்யா பாடல் வரிகள், Thaanguthaiya Thaanguthaiya Lyrics