Thanimaiyaga Irunthean

தனிமையாக இருந்தேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Naan Emmathiram
தனிமையாக இருந்தேன்
என் துணையாக வந்தீர்
வெறுமையாக இருந்தேன்
உம் கிருபையாலே நிறைத்தீர் – 2
இயேசுவே நான் எம்மாத்திரம்
நீர் நினைப்பதற்கு நான் எம்மாத்திரம் – 2
விழபார்க்கும் கண்கள் முன்னால் உயர்த்தி வைத்தீரே
இச்சகம் பேசும் மனிதர்கள் முன்பு கரம்பிடித்தீரே – 2- இயேசுவே
வழிமறந்து திரிந்த நேரம் தேடி வந்தீரே
காயப்பட்டு கிடந்த நேரம் (என்னை )எண்ணெய் வார்த்தீரே – 2- இயேசுவே