tharisu nilangkalil karisanai kollum

தரிசு நிலங்களில் கரிசனை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தரிசு நிலங்களில் கரிசனை கொள்ளும்
தரிசனம் தாரும் பரிசுத்தரே
தேவை எங்கள் தேசமே
தேடிவந்தோம் திருப்பாதமே
ஆண்டுகள் போனபின்னும்
அறுவடை இல்லையே
ஆத்தும பாரம் உள்ளோர்
அவனியில் கொஞ்சமே
மீட்பின்றி மாண்டிடும் ஜனங்களை தேடவே
ஆட்களை எழுப்பும் எஜமானனே
மேய்ப்பனில்லாதொரு
மந்தையை போலவே
மேய்ச்சலில்லாமலே
என் ஜனம் மாளுதே
இயேசு என்னும் ஜீவ ஆகாரம் தந்திடும்
ஆட்களை அனுப்பும் எஜமானனே
கடைசி மனிதனுக்கும்
கல்வாரி தேவையே
இன்ப சுவிசேஷம் ஒன்றே
ஜீவனின் மேன்மையே
உந்தனின் சேவையை செய்திட அன்பினால்
ஆட்களை நிரப்பும் எஜமானனே