1.tharmak kasaip parum

தர்மக் காசைப் பாரும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.தர்மக் காசைப் பாரும்
விழும் ஓசை கேள்;
யேசுவுக்கு யாவும்
நேசமாய் ஈவோம்.
ஓசை, ஓசை, ஓசை, ஓசை
காசின் ஓசை கேள்;
யேசுவுக்கு யாவும்
நேசமாய் ஈவோம்.
2.சிறியோர் நமக்கு
செம்புப் பொக்கிஷம்
பெரியோ ரானாலோ
ஈவோம் கனகம்.
3.எங்கள் சொந்தக் காசை
யேசு நாதர்க்கே
தந்தோம் நல் உதார
சிந்தையோடுமே.
4.சிறியோர் ஈந்ததை
ஏற்றுக்கொள்ளுமே;
சிறிதான விதை
சித்தியாகுமே.
தர்மக் காசைப் பாரும் பாடல் வரிகள், Tharma Kaasai Paarum Lyrics