Thayai Pola Thertrineere

தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா
தகப்பன் போல சுமந்தவரே நன்றி ஐயா
என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன்
உம்மை இயேசையா இயேசையா
உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை
உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே
துன்ப துயர் நேரத்தில் எல்லாம்
என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரே
என்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே
வியாதியிலே படுக்கும் போதெல்லாம்
என்னை தூக்கி எடுத்து குணமாக்கினீர்
என் பரிகாரியானவரே