1.thayapara! en ullaththil

தயாபரா என் உள்ளத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.தயாபரா! என் உள்ளத்தில்
தேவன்பை ஊற்றுமேன்;
அப்போது திவ்ய நேரத்தில்
வேரூன்றி, நிலைப்பேன்.
2.வானாக்னி என்னில் மூட்டியே
துராசை எரிப்பீர்;
எப்பாவ மேடும் குன்றுமே
உருக்கிவிடுவீர்.
3.முன் பெந்தெகோஸ்தே நாளிலே
தீ போலத் தோன்றினீர்;
சுட்டெரிப்பின் நல்லாவியே!
என் பாவம் அழிப்பீர்.
4.என் ஐம்புலன்கள் யாவையும்
ஊடுருவிச் சென்றே,
சுத்தாங்கம், ஜீவன், ஜோதியும்,
உண்டாகச் செய்யுமே.
5.அப்போது இடறாமலும்
நற்பாதை செல்லுவேன்;
என் மீட்பர் பேரில் முற்றிலும்
எக்காலும் சாருவேன்.
தயாபரா என் உள்ளத்தில் பாடல் வரிகள், Thayaparaa En Ullaththil Lyrics