Thayavullorkku neer thayavagureer song lyrics

தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்,
உத்தமர்க்கு உத்தமர் ஆகுறீர்.
தேவரீர் என் விளக்கை ஏற்றுகிறீர்;
உம்மாலே நான் மதிலைத் தாண்டிடுவேன்.
உம் வழிகள் உத்தமமானதே,
நிலையான கன்மலை நீரே.
தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்,
உத்தமர்க்கு உத்தமர் ஆகுறீர்.
நான் நடக்கும் வழிகளை அகலமாக்குவீர்
எனக்கான நீதியை விசாரிக்கிறீர்
உமக்கே சங்கீதம் நான் பாடுவேன்
மகத்தான இரட்சகர் நீரே.
தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்,
உத்தமர்க்கு உத்தமர் ஆகுறீர்.
உயர்தலத்தில் என்னை நிறுத்துகிறீர்
உலகத்தை மேற்கொள்ள பழக்குகிறீர்.
இரட்சிப்பின் கேடகம் எனக்குத் தந்தீர்,
காருண்யக் கர்த்தர் நீரே.
தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்,
உத்தமர்க்கு உத்தமர் ஆகுறீர்.