thazthukirean thalai vanangukirean

தாழ்த்துகிறேன் தலை வணங்குகிறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாழ்த்துகிறேன் தலை வணங்குகிறேன்
அர்ப்பணித்தேன் உந்தன் சமூகத்திலே -2
பாவங்கள் பல நான் செய்து விட்டேன்
பல அக்கிரமங்களால் உம்மை நோகடித்தேன்
மன்னியும் மன்னியும் என் தெய்வமே
இந்த ஒரு விசை மன்னியும் என் தெய்வமே
தருணங்கள் பல நான் தவறவிட்டேன்
பல மீறுதல்களால் உம்மை மறுதலித்தேன் – மன்னியும்
மாயங்கள் பல நான் பின் தொடர்ந்து
பல மயக்கங்களால் நான் மதி இழந்தேன் – மன்னியும்
உயிர்ப்பியும் உயிர்ப்பியும் என் தெய்வமே
உந்தன் பரிசுத்த ஆவியால் உயிர்ப்பியுமே- மன்னியும்
இறங்கிடும் இறங்கிடும் என் தெய்வமே
என் எண்ணங்கள் நிறைந்திட இறங்கிடுமே – மன்னியும்
நிரப்பிடும் நிரப்பிடும் என் தெய்வமே
உந்தன் மகிமையால் நிரம்பிட நிரப்பிடுமே- மன்னியும்
தாழ்த்துகிறேன் தலை வணங்குகிறேன் பாடல் வரிகள், Thazthukirean Thalai Vanangukirean Lyrics