Thedugiraen Lyrics

தேடுகிறேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேடுகிறேன் தேடுகிறேன்
தொலைந்தது எது என்று தெரியாமல் நான் தேடுகிறேன்
தேவைதான் எது என்று தெரியாமல் தினமும் தேடுகிறேன்
நீர் தான் என் தேவை இயேசையா
நீர்தான் என் தேடல் இயேசையா
உம்மை அறிவதே நித்திய ஜீவன்
உம்மையே தினமும் தேடுகிறேன்
1உயிரை உணரும் உறவின் அணைப்பைத் தேடுகிறேன்
பிரிந்துட முறிந்திட முடியாத இணைப்பைத் தேடுகிறேன்
நீர் தான் என் தேவை இயேசையா
நீர்தான் என் தேடல் இயேசையா
உம்மை அறிவதே நித்திய ஜீவன்
உம்மையே தினமும் தேடுகிறேன்
2.தொலைந்ததே நான் தான் என்று தெரியாமல் தேடுகிறேன்
தேடுவதும் நீர்தான் என்று அறிந்து அமர்கிறேன்
நீதான் என் தேடல் மகனே
நீதான் என் தேவை மகளே
எனக்குள் வாழவே உன்னை படைத்தேன் நீ தான் என் சந்தோசமே
நீதான் என் தேவை மகளே
நீதான் என் தேடல் மகனே
எனக்குள் வாழவே உன்னை படைத்தேன் நீ தான் என் சந்தோஷமே