therraravalan neere

தேற்றரவாளன் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

தேற்றரவாளன் நீரே
என் தேவைகள் அறிந்தவரே (2)
(என்) தேவைகள் அறிந்து
(என்) தேவைக்கும் மேலாய் கிருபை தருபவரே (2)
ஐயா ஒன்றுமில்ல,
உம்மால் ஆகாதது,
நான் கண்டதில்ல,
உம்மால் முடியாதது (2)
தேவைகள் அறிந்து தேவைக்கும் மேலாய் கிருபை தருபவரே –
(என்) தேவைகள் அறிந்து தேவைக்கும் மேலாய் கிருபை தருபவரே
திக்கற்ற நேரத்தில் துணையானவர்
இக்கட்டுவேளையில் இணையானவர் – (2)
ஆதரவற்றோருக்கு அரணானவர்
கிருபைக்கு இயேசுவே சீரானவர் – (2)
ஐயா ஒன்றுமில்ல,
உம்மால் ஆகாதது,
நான் கண்டதில்ல,
உம்மால் முடியாதது (2)
(என்) பெலனை அறிந்து தேவைக்கும் மேலாய் கிருபை தருபவரே
(என்) நிலைமை அறிந்து தேவைக்கும் மேலாய் கிருபை தருபவரே
(என்) குணங்கள் அறிந்து தேவைக்கும் மேலாய் கிருபை தருபவரே
(என்) திராணியை அறிந்து தேவைக்கும் மேலாய் கிருபை தருபவரே
தேற்றரவாளன் நீரே பாடல் வரிகள், Thetraravaalan Neerae Lyrics