theti vantha nalla nanpan

தேடி வந்த நல்ல நண்பன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேடி வந்த நல்ல நண்பன்
எந்தன் தனிமையிலும் பெலனும் நீங்கதானே – என்னை
நானும் ஸ்ட்ராங்கர் நானும் ஸ்ட்ராங்கர்
ஸ்ட்ராங்கர் மாறுவேனே
வேகமாக முன்னேரி செல்கிறேன் – தேடி வந்த
1.சோதனையின் மத்தியிலும்
வேதனையின் மத்தியிலும்
என்னோடு இருந்தவர் நீங்கதானே
நான் தண்ணீரை கடக்கும்போது
நான் அக்கினியில் நடக்கும் போது
என்னோடு இருந்தவர் நீங்கதானே
இருளெல்லாம் வெளிச்சமாக மாற்றினீரே
என் வாழ்க்கையை பிரைட் ஆஹ் மாற்றினீரே
2.தூரமாக நின்றேன் நானும்
வெகு தூரம் சென்றேன் நானும்
ஆனால் உம் அன்பு என்னை தேடியதே
கறைபட்டு வந்த என்னை
கருத்தோடு அணைத்துக்கொண்டு
முத்தங்களாலே என்னை முத்தம் செய்தீர்
அப்பாவின் அன்பை நானும் ருசிக்கையிலே
எனக்குளே புது பெலன் வந்திடுதே