Thetrum Devan Lyrics

தேற்றும் தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தாவே நீர் என்னை தேற்றும் தேவன்
நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் -2
சோகத்தால் என் உள்ளம் சோரும்போதும்
உம் ஆறுதல் என்னைத் தேற்றும்-2
என் கால்கள் சறுக்கும் முன்னே
நீர் என்னைத் தாங்குகின்றீர்
மானானது நீரோடையை – 2
வாஞ்சிப்பதுபோல் உம்மை வாஞ்சிக்கின்றேன்
மானிடரின் வேஷங்களை
மாற்றும் உம் நேசந்தனை
உணரும் நல்ல உள்ளம் தாரும் -2
உமதாவியால் என்னை நிரப்பிடும்
உம் உள்ளம் உடையப்பண்ணும்
பாவங்கள் என்னில் உண்டோ?
சோதித்தென்னை சுத்திகரியும் -2
நித்திய வழிதன்னில் என்னை நடத்தும்