theva aaviye varum – Deva Aaviyae Vaarum

தேவ ஆவியே வாரும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

தேவ ஆவியே வாரும் – Deva Aaviyae Vaarum
பல்லவி
தேவ ஆவியே வாரும்
ஜீவாவியே!
அனுபல்லவி
பாவியைப் பெருங் கோபியை
தேவ துரோகியை,
வெல்லும் வல்லவா!
சரணங்கள்
1. ஆத்துமாக்களின்
அந்தகாரம் நீக்க
வல்லவா! பாவங் கொல்ல வா! பேயை
வெல்ல வா! எங்கள் நல்லவா! – தேவ
2. கல்வி கற்றோரும்
செல்வர் பெரியோரும்
கர்த்தனே! உந்தன் சத்திய நெறி
சித்தம் யாதென்றுணரவே! – தேவ
3. மானிடர் ஞானம்
மனதையும் மாற்றுமோ?
வானத்தை விட்டு மானிடனாகி
மீட்பின் பாதை திறந்தார்! – தேவ