1.theva aaviye

தேவ ஆவியே பூர்வ நாளிலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.தேவ ஆவியே,
பூர்வ நாளிலே
பல பாஷை பேசும் நாவும்
மேன்மையான வரம் யாவும்
உம்மால் வந்ததே
தேவ ஆவியே.
2.சத்ய ஆவியே
போதகர் நீரே;
மீட்பர் அருமையைக் காட்டி
அவர் சாயலாக மாற்றி
என்னை ஆளுமே,
சத்ய ஆவியே.
3.ஜீவ ஊற்று நீர்
என்னில் ஊறுவீர்
சுத்தமற்ற குணம் நீக்க,
ஆத்துமாவின் தாகம் தீர்க்க,
ஜீவ ஊற்று நீர்,
என்னில் ஊறுவீர்.
4.நேச ஆவியே,
என் தன் நெஞ்சிலே
ஐயம் நீங்க, இச்சை மாள,
தேவ சமாதானம் ஆள
வாசம் பண்ணுமே,
நேச ஆவியே.