theva aaviyinal nadaththappatukinravan naan

தேவ ஆவியினால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவ ஆவியினால்
நடத்தப்படுகின்றவன் நான்
யாருக்கும் அடிமையில்லை
அழைத்தவர் என் இயேசு
என் இயேசுவின் அன்பைப்
பிரிப்பவன் யார் – 2
இயேசுவின் நிமித்தம்
எந்நேரமும் அடிக்கப்படுகின்ற
அடிக்கப்படுகின்ற ஆடு நான்
வியாகுலம் வரட்டும்
வியாதிகள் வரட்டும்
துன்பங்களோ நாசமோ
சங்களோ
என்றென்றுமே என் இயேசுவின்
அன்பை விட்டு பிரிப்பவன் யார்
... தேவ
மரணமானாலும்
ஜீவனானாலும்
தேவ தூதர்களானாலும்
அதிகாரமானாலும்
வல்லமையானாலும்
முற்றிலும் கொள்ளுவேன்
என்றென்றுமே என் இயேசுவின்
அன்பை விட்டு பிரிப்பவன் யார்
... தேவ
உயர்வானாலும்
தாழ்வானாலும்
வேறெந்த சிருஷ்டியானாலும்
பெலவீனனானாலும்
பெலனற்றுப் போனாலும்
எனக்கு என்றும் இயேசு போதும்
என்றென்றுமே என் இயேசுவின்
அன்பை விட்டு பிரிப்பவன் யார்
... தேவ