theva theva saranam

சரணம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவா தேவா சரணம்
உம்மைப் பணிந்தேன் நானும் சரணம்
தேவா தேவா சரணம்
இச்சணமே அருள்வாய் சரணம்
என்னை நடத்தும் இறைவா
என் முன்னே செல்லும் மேய்ப்பரே
உன்னை அறிந்து வாழும்
நல் உணர்வு தருவாய் சரணம்
வழியும் வளமும் நலமும் அருளும்
எங்கள் தேவா
அழியும் உலகின் இருளை அகற்றும்
ஒளிநிறை தேவா
வழிக்கு நீயே ஒளியாம்
என் வழிக்கு நீயே வழியாம்
வழியில் என்றும் நடத்தி
நல் வாழ்வு அருள்வாய் சரணம்
உயிர்த்தெழுந்த இறைவா
இந்த உலகை ஜெயித்த தேவா
உந்தன் வல்ல மகிமை
எனில் விளங்கச் செய்வாய் சரணம்