theva thevanam iyesu rajan – ennai

தேவ தேவனாம் இயேசு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

தேவ தேவனாம் இயேசு ராஜன் – என்னை
மீட்டிட பாரில் வந்து – சாப
சிலுவையில் தொங்கினீரே – 2
மரணத்தை வென்று மூன்றாம் நாளில்
உயிர்த்தெழுந்த எந்தன் – இயேசு
உயிரோடு இன்றும் வாழ்கிறீர் – 2
மகிமைக்கு பாத்திரர் நீர் மகிமையாய் இருப்பவர் – 2
மகிமையின் தேவன் நீர் பாவியாம் என்னையும் நேசித்தீர் – 2
உமது புகழ் பாடியே நான் உம்மை போல் வாழுவேன்
உந்தனின் வல்லமை தாரும் என்னுயிர் தேவனே – 2
சீக்கிரம் வருவேன் என்று சொன்னவர் நீரல்லோ – 2
மணநாளை நாடி நான் மணவாட்டியாய் நிற்கிறேன் – 2
மேகம் மீதில் பறந்து இயேசுவோடு செல்வேன்
நித்யமாம் பரலோகில் வாசம் செய்குவேன் – 2