theva um karaththil ennaiyum

தேவா உம் கரத்தில் என்னையும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவா உம் கரத்தில் என்னையும்
முத்திரை மோதிரமாய் கண்டீர்
தேசம் எங்கும் சுவிசேஷம் சொல்ல
நேசமாய் என்னையும் தெரிந்து கொண்டீர்
எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்
என பயந்து நிற்பேனோ கலங்கிடுவேனோ
இருக்கிறவராக இருக்கிறேன் என்றவர்
இருக்கிறார் என்னுடன் முன்செல்வனே
1.தேவா என் பேர் சொல்லி அழைத்தீரே
உம் நீதியின் கரத்தினால் தாங்கிடுமே
ஆவியின் வல்லமை அனுதினம் தந்து
செயல் வீரனாய் என்னை மாற்றிடுமே
2. தேவா என் வாழ்நாள் முழுவதும்
திருச்சபை நாட்டிட உழைத்திடுவேன்
அறியாதோர் இயேசுவை அறிந்திடவே
சுவிசேஷ நற்பணி செய்திடுவேன்.
தேவா உம் கரத்தில் என்னையும் பாடல் வரிகள், Deva Um Karaththil Ennaiyum Lyrics