theva um kirupai – Deva Vum Kirubai Thaarumae

தேவா உம் கிருபை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவா உம் கிருபை – Deva Vum Kirubai Thaarumae
தேவா உம் கிருபை தாருமே
தேவா உம் தயவு வேண்டுமே – (2)
என் சித்தம் அல்ல உம் சித்தம் தானே
தம் கிருபையை பெற்றுக் கொண்டேனே
தேவா தயவு வேண்டுமே-( 1 )
1) இடைவிடாமல் ஜெபித்திட கிருபை தாருமே
ஆவியோடும் கருத்தோடும்
துதிக்கத் தாருமே -(2)
என்னை நேசித்தார் உன்னை நேசிப்பார்-(2)
கர்த்தரின் பாதத்தையே பற்றிக் கொள்வோமே
தேவா தயவு வேண்டுமே (1)
2) அதிகாலையில் தேடுகிற உணர்வைத் தாருமே
உண்மையோடும் பாடுகின்ற கிருபை தாருமே – (2)
அன்பு கரங்களால் நம்மைத் தாங்கி நடத்துவார் – ( 2 )
கர்த்தருக்காக பொறுமையோடு காத்திருப்போமே
தேவா தயவு வேண்டுமே-(1)
3) முழங்காலில் நின்று ஜெபிக்க
கிருபை தாருமே
வீணையோடும் தம்புரோடும் துதிக்கத் தாருமே – (2)
உம்மைத் துதிக்கிறோம் நாங்கள்
உம்மைத் துதிக்கிறோம்-(2)
உற்சாகத்தின் ஆவியை நாம் பெற்றுக் கொள்வோமே
தேவா தயவு வேண்டுமே-(1)
தேவா தயவு வேண்டுமே – (2)
என் சித்தம் கொண்டேனே-(2)