thevan mariththe, ivvulakil uyirththe

தேவன் மரித்தே இவ்வுலகில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவன் மரித்தே, இவ்வுலகில் உயிர்த்தே
விண்ணுக் கெழுந்தார், ஜெயம்! ஜெயம்!
அனுபல்லவி
பாதகர்க்காகப் பரிந்தவர் பேச
பரத்துக்கெழுந்தார், நயம்! நயம்!-கிறிஸ்து – பர
சரணங்கள்
1.பன்னிரு சீடரும் பகைவருங் காண
பதியதற் கேகினர், ஜெயம்! ஜெயம்! கிறிஸ்து;-பதி
உன்னத சுவிசேஷ உலகினில் கூறியே
உம்பர மேகினர்,நயம்! நயம்! கிறிஸ்து;
2.ஆகமப் படியே அவனியில் வந்தே
அனைத்தையும் முடித்தார். ஜெயம்! ஜெயம்! கிறிஸ்து; அனை
மேகமீ தேறி மிகப்புவி யோர்க்காய்
வேண்டல் புரிகிறார், நயம்! நயம்! கிறிஸ்து;-வேண்
3.மோசே முனிவர்கள், முன்னுரை தீர்க்கர்கள்
முதல்வனைத் தொழுகிறார், ஜெயம்! ஜெயம்!கிறிஸ்துமுதல்
ஆசைகொண்டெல்லா அரூபிகள்’ கூடி
அமலனைப் பணிகிறார், நயம்! நயம்! கிறிஸ்து;-அம
4.பாவியே, உனக்காய்ப் பரிந்தவர் பேசப்
பரமதற்கெழுந்தார், ஜெயம்! ஜெயம்!-கிறிஸ்து;-பர
சாவில் நின்றுன்னை மீட்டவர் மோட்ச
தலமதைத் தருவார், நயம்! நயம்! கிறிஸ்து-தல தேவ
தேவன் மரித்தே இவ்வுலகில் பாடல் வரிகள், Devan Marithae Evvulagil Lyrics