Thevanin rajjiyaththil

தேவனின் இராஜ்யத்தில்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவனின் இராஜ்யத்தில்
நீதியின் விருட்சம் நானே
சுகவாழ்வு எனக்குள்ளே
சீக்கிரமாய் துளிர்க்கின்றதே (2)
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)
இயேசுவின் கரங்களிலே
செல்லப்பிள்ளை நான்தானே
அவர் என் நித்தியப் பிதா
நித்திய ஜீவன் எனக்குள்ளே (2)
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)
யேகோவா ரஃபா
என் குடும்ப வைத்தியர் (2)
இயேசுவின் தழும்புகளால்
பூரணமாய் சுகமானேன் (2)
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)
யேகோவா ரூஃபா
கர்த்தர் என் நல் மேய்ப்பர் (2)
பசுமையான சூழ்நிலையில்
தினம் தினம் நடத்திடுவார் (2)
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)
அப்பா உம் சமூகத்தில்
நீதியின் விருட்சம் நானே
சுகவாழ்வு எனக்குள்ளே
சீக்கிரமாய் துளிர்க்கின்றதே
சிலுவை நிழல் போதுமே
இயேசு இரத்தம் போதுமே
அபிஷேகம் போதுமே
வசன வெளிச்சம் போதுமே
கவலைப்படுவதில்லையே
துக்கப்படுவதில்லையே
வேதனைப்படுவதில்லையே
வியாதிப்படுவதில்லையே
சிலுவை நிழல் என்மேலே
இயேசு இரத்தம் என்மேலே
அபிஷேகம் என்மேலே
வசன வெளிச்சம் என்மேலே
அப்பா உம் சமூகத்தில்
நீதியின் விருட்சம் நானே
சுகவாழ்வு எனக்குள்ளே
சீக்கிரமாய் துளிர்க்கின்றதே
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)