thirantha vasalai iyesu vaiththare

திறந்த வாசலை இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

திறந்த வாசலை இயேசு வைத்தாரே
ஒருவனும் அதை, அடைக்க முடியாதே
பாடுவோம் பாடுவோம்
கெம்பீரமாய் பாடுவோம்
முழங்குவோம் முழங்குவோம்
ஜெய தொணியாய் முழங்குவோம்
சிங்க கெபிதான் ஆனாலும் தானியேல்
நீ பயப்பட வேண்டாம்
உன் ஜெபம் கேட்கப்பட்டது
கெபியின் வாசல் திறந்தது
எழுந்து வா எழுந்து வா
கடற்கரை தானோ ஆனாலும் பேதுரு
நீ பயப்பட வேண்டாம்
உன் வலையை ஆழத்தில் போடு
கடலில் வழியும் திறந்திடும்
எழுந்து வா எழுந்து வா
பத்மு தீவுதான் ஆனாலும் யோவானே
நீ பயப்பட வேண்டாம்
உன் மன்றாட்டு கேட்கப்பட்டது
பரலோகமும் திறந்தது
எழுந்து வா எழுந்து வா
சிறைவாசம்தானோ ஆனாலும் பவுலே
நீ பயப்பட வேண்டாம்
உன் துதி கேட்கப்பட்டது
சிறை கதவும் திறந்தது
எழுந்து வா எழுந்து வா
எந்த சூழ்நிலை ஆனாலும் சகோதரா (சகோதரி)
நீ பயப்பட வேண்டாம்
உன் அழுகை கேட்கப்பட்டது
ஜெயத்தின் பாதை திறந்திடும்
எழுந்து வா எழுந்து வா