thiree eka ingkezhun tharulvay – Thiri Yeaga Engealuntharulvaai

திரீ ஏகா இங்கெழுந் தருள்வாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

திரீ ஏகா இங்கெழுந் தருள்வாய் – Thiri Yeaga Engealuntharulvaai
பல்லவி
திரீ ஏகா இங்கெழுந் தருள்வாய்
இப்புதிய இல்லமதில்
அனுபல்லவி
ஆசீர்வாதம்….அருளிடவா
ஆதி அந்தம் இல்லாத் தேவா
சரணங்கள்
1 எங்கள் முன்னால் நீர் சென்றால்
எல்லாம் நிறைவு பெற்றிடுமே
அல்பாவொமே காவும் நீரே
நல் வரங்கள் அருளும் கோனே
2. அருள் தந்தீர் ஆரம்பிக்க
துணை செய்தீர் நிறைவு பெற
தோத்திரமே தூயவரே
நேத்திரம் போல் காத்திடுமே.
3. தெளித்திடுவீர் உம் உதிரம்
நிறைத்திடுவீர் உம் ஆவியால்
அனுதினமும் மகிழ்ந்து வாழ
அருள் செய்வாய்த் திருக்குமரா
4. தந்திடுவீர் சுகவாழ்வு
பொழிந்திடுவீர் நிறை செல்வம்
பெத்தேலைப் போல் பெனியேலைப் போல்
ஜெபவீடாய் மாற்றிடுவீர்
5.படைக்கிறோமே உம்பாதம்
பணிவாய், ஆசீர்வதித்திடுமே
துடைத்திடுமே, எம் குறைகள்
துதியுமக்கே ஆமென் ஆமென்