thiriththuva thaevaa sthothiram

திரித்துவ தேவா ஸ்தோத்திரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

திரித்துவ தேவா ஸ்தோத்திரம்
கிருபையால் என்னை நிறைத்தவா ஸ்தோத்திரம்
வாடிய பயிரென நான் நின்ற வேளை
அருள் மழையை பொழிந்தீர்
தேடியே என்னை மீட்டிட
உமது திரு உதிரம் சொரிந்தீர்
கருணையில் ஆழியின் ஆழத்தை கொண்ட
நீர் கனிவுடன் என்னை அழைத்தீர்
பணிவுடன் உமது மலரடி தொழுது
படைக்கின்றேன் ஸ்தோத்திரம்
தந்தையை போல பாசமாய் என்னை
தோள்களில் நீர் சுமந்தீர்
உந்தனின் அன்பை - நான்
எண்ணி நாளும் வந்தனைகள் புரிவேன்