thiriththuvap porulai thiriyeka vuruvai

திரித்துவ பொருளை திரியேக

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

திரித்துவப் பொருளை திரியேக வுருவை
தினமும் அல்லேலூயா துதியுங்கள் அவரை
கருத்தனைத் துதியும் வானுளவைகளே
களித்துன்ன தங்களில் துதியுந் தூதர்களே
கடவுளின் சேனைகளே துதியும்
கதிரவன் மதியே நட்சத்திரங்களே
கனவானங்களே சகல ஜனங்களே.
மகியுளவைகளே மகா நீர் மச்சங்களே
மழைகளே அக்கினியே மூடுபனிகளே
மலைகளே காற்றே மேடுகளே
மதுர மரங்களே கேதுருக்களே
மதவிலங்குகளே பறவையினங்களே
புவியரசர்களே சகல ஜனங்களே
புவன பிரபுக்களே நீதிபதிகளே
புகழ் வாலிபர் கன்னிகைகளே
புதல்வர்களே செல்வ புதல்விகளே
புங்கவனை துதியும் முதியோர்களே
ஆண்டவர் நாமம் அதிக உயர்ந்தது
அவர் மகிமை வான்புவியில் சிறந்தது
ஆனந்தமாய் தன்னடியார்கள்
அகமகிழ்ந்திஸ்ரவேல் வழிகளை வாழ்த்தினார்
அன்னவர்க்காய் ஒரு கொம்பையுயர்த்தினார்.