thiriyega devanai thudhithiduvom

திரியேக தேவனைத்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Thiriyega Devanai Thuthithiduvom – திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌
1.திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌
நிதம்‌ அவர்‌ நாமத்தை உயர்த்திடுவோம்‌
நீடித்த நாட்களாய்‌ நிறைந்தெம்மையே
நித்தமும்‌ நடத்துவார்‌
மீட்பரும்‌ நீரே மேய்ப்பரும்‌ நீரே
மேன்மையும்‌ மகிமையுமே
மாறிடா நல்‌ இயேசுவே :
பாவத்தில்‌ ஜீவித்த காலத்திலே
பரிவுடன்‌ இரட்சிக்க வந்தவரே
நீங்காது விசுவாசப்‌ பாதையிலே
தாங்கினீர்‌ உம்‌ தயவால்‌ . – மீட்பரும்‌
சோதனை சூழ்கையில்‌ ஜெயக்கொடியாய்‌
சோர்ந்திடும்‌ உள்ளத்தில்‌ மா பெலனாய்‌
தனிமையில்‌ ஏற்றதோர்‌ தோழனுமாய்‌
கனிவாய்க்‌ கரம்‌ பிடித்தீர், – மீட்பரும்‌
அபிஷேகம்‌ செய்து எம்‌ சிரசதனை
ஆனந்த சந்தோஷத்தால்‌ நிறைத்தே
அகமதில்‌ இன்பக்‌ கீதம்‌ அளித்தே
மகிமையில்‌ முடி சூட்டுவீர். – மீட்பரும்‌
எக்காள நாதம்‌ வானில்‌ முழங்க
ஏகிடுவார்‌ சுத்தர்‌ இயேசுவுடன்‌
அழிவற்றோராய்‌ அவரோடிணைந்தே
ஆளுவோம்‌ சீயோனிலே . – மீட்பரும்