thiru iraththam sinthi paliyaki ennai

திரு இரத்தம் சிந்தி பலியாகி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs and Roman Catholic Songs collection.

திரு இரத்தம் சிந்தி பலியாகி என்னை
மீட்டவரே இயேசையா-2
1. பாவி என்றென்னை தள்ளாமலே
பரிதவித்தீரே ஐயா-2
மா பாவி என்னை மகனாக ஏற்க
பலியானீரே ஐயா-2
2. முள்முடியை தலையின் மேல் சுமந்தீரே ஐயா
முகமெல்லாம் இரத்தம் ஐயா-2
பூரண அழகுள்ள உந்தன் திருமுகம்
அழகிழந்ததே ஐயா-2
3.கைகளில் கால்களில் ஆணிகள் ஐயா
கசையடி ஏற்றீறையா-2
காணாத ஆட்டைப்போல் வழிமாறி அழைத்தேன்
கண்டு பிடித்தீரையா-2
4. கந்தை அணிந்தே நிந்தை சுமந்து நீர்
கள்ளர் நடுவில் தொங்கினீர்-2
தாகம் தாகம் என்று கதறினீர்
என் தாகம் தீர்த்தீரையா-2
5. நீசன் என் மேலே பாசம் வைத்ததினால்
கோர பலியானீரே-2
ஜீவ பலியாக என்னையே தந்தேன்
ஏற்றுக்கொள்ளும் இயேசுவே-2