thirumpu thirumpu mananthirumpu

திரும்பு திரும்பு மனந்திரும்பு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

திரும்பு திரும்பு மனந்திரும்பு
விரும்பு விரும்பு இரட்சிப்பை விரும்பு
விரும்பினால் உள்ளத்தில் உவகை அரும்பும்
நிறைந்திடும் மனதில் மகிழ்வு நிறைந்திடும்
வந்திடும் வாழ்வில் அமைதி வந்திடும்
நீயும் பெற்றிடவா
வாலிபனே காலமதை வீணில் கழித்து
அலையாதே
கன்னிகையே அழகென்று அரைக்குறை
ஆடை அணியாதே
நாகரீகமென்று பெண்களைப் போன்று
முடியை வளர்க்காதே
பெண்மையை மறந்து ஆணுடை
தரித்து அலைந்து திரியாதே
இளைஞரே புகைப்பதனால் அற்ப
ஆயுளில் மடிவீரே
போதையில் மதிமங்கிய வாழ்வை
கெடுத்துக் கொள்ளாதே
தறிகெட்டு நீயும் திரைப்படம் பார்த்து
நெறிகெட்டுப் போகாதே
உந்தன் சரீரம் தேவனின் ஆலயம்
அதனைக் கெடுக்காதே
மங்கையரே வீண் பேச்சில் சிரித்து
காலம் கழிக்காதே
ஆணோடு சமமென்று வழுக்கி
விழுந்து போகாதீர்
சாயத்தை முகத்தில் பூசியே
இயற்கை அழகைக் கெடுக்காதே
பொன் நகை தேடி புன்னகை
இழந்து புலம்பித் தவிக்காதே
தீமையை நாவினால் பேசி அகமதைக்
கெடுக்காதே
பண்பற்ற தீர்ப்பின் சிந்தையை
கெடுத்துக் கொள்ளாதே
அநியாயத்தால் வந்த செல்வம் என்றும்
ஒன்றுக்கும் உதவாதே
பணத்தின் ஆசை தீமைக்கு வேராம்
அதனை விரும்பாதே