Tholaintha Ennai Neer song lyrics

தொலைந்த என்னை நீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

F maj
தொலைந்த என்னை நீர் தேடி வர
நான் எம்மாத்திரம் ஐயா
பாவி எனக்காய் உம் ஜீவன் தர
நான் எம்மாத்திரம் ஐயா-2
நான் விடுதலை அடைந்திட
நீர் ஆக்கினை அடைந்தீரே
இனி நான் எனக்கு சொந்தம் அல்ல
உம் சொந்தமே-2
மீட்கும் பொருளாக உம் இரத்தத்தை
நீர் எனக்காக சிந்தினீரே
தாயின் அன்பிலும் மேலானதை
அந்த சிலுவையில் காண்பித்தீரே-2
நான் விடுதலை அடைந்திட
நீர் ஆக்கினை அடைந்தீரே
இனி நான் எனக்கு சொந்தம் அல்ல
உம் சொந்தமே-2
தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே
இனி நான் என்றும் உம் சொந்தமே-4
தொலைந்த என்னை நீர் தேடி வர
நான் எம்மாத்திரம் ஐயா
பாவி எனக்காய் உம் ஜீவன் தர
நான் எம்மாத்திரம் ஐயா-2
நான் விடுதலை அடைந்திட
நீர் ஆக்கினை அடைந்தீரே
இனி நான் எனக்கு சொந்தம் அல்ல
உம் சொந்தமே-2
உம் சொந்தமே-2