tholainthu poona ennaiye

தொலைந்து போன என்னையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

தொலைந்து போன என்னையே
தோளில் சுமந்தவரே
மறந்து போன என் வாழ்வை
மீண்டும் நினைத்தவரே
எந்தன் கண்கள் நதியாய் பாய்கின்றதே
சொல்ல முடியா சுமையால் சாய்கின்றதே
கண்ணீரை தோற்பையில் சேர்த்து வைக்கும் இறைவா
என்னை படைத்து நலம் என கண்டாய்
தீமைகள் தினம் தினம் வாட்டுவதேனோ
இரவும் பகலும் உனை தேடினேன்
வேதனை மட்டும் விடயானதே
இலையுதிர் மரம்போல் எல்லாம் இழந்தேன்
துளிர்விட என்னில் நீ வர வேண்டும்
நிரந்தர சொந்தம் நீதானே
எழுந்திட துடித்திடும் வாழ்க்கையின் பாதையில்
தோல்விகள் நோய்கள் துரத்துவதேனோ
நலமுடன் வாழ்க்கையில் சொந்தங்கள் ஆயிரம்
விழுகையில் விடைபெறும் உறவுகளே
சிறகுகள் இல்லா பறவைப்போல் ஆனேன்
கரைசேர மறந்த படகாகி போனேன்
கலங்கரை விளக்கே இயேசுவே