thooya parap porule – Thooya Para Porulae

தூய பரப் பொருளே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தூய பரப் பொருளே – Thooya Para Porulae
பல்லவி
தூய பரப் பொருளே,
துன்பற ரட்சித்தருளே.
சரணங்கள்
1.நேய பரனே, உனது நீதி நெறி மறுத்துத்
தீய நரர் ஆம் எளியர் செய்த பாவம் பொறுத்து,
2.காவல் எமக் குன்னை அன்றிக் காண யாரும் இலையே
தேவன் நீயே மேவும் எங்கள் சிறந்த கன்மலையே,
3.சுற்றிவரும் கொள்ளை நோயில் தொண்டர் மடியாமலே
பற்றதாய் வைத் தாதரித்தெம் பாவ மதியாமலே,
4.எங்கள் பிணையாக வந்த ஏசுநாதர் மூலமாய்ப்
பங்கம் அற யாம் தழைக்கப் பாரில் அனுகூலமாய்,
5.தீய குணம் யாவையுமே சிந்தையை விட்டகற்ற,
நாயனே, எப்போதும் நாங்கள் நன்மைதனை இயற்ற