thooyathi thooyarae en thunaiyaalarae

தூயாதி தூயவரே என் துணையாளரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தூயாதி தூயவரே என் துணையாளரே
தேற்றிடும் தெய்வமே என் மணவாளனே (2)
உம்மை பாடி போற்றுவேன் என்றென்றும் ஆராதிப்பேன்
1. சேற்றில் விழ்ந்த என்னையும் உம் கரத்தால் தூக்கினீர்(2)
நாற்றம் எல்லாம் மாற்றினீரே நன்றி நன்றி ஐயா (2)
2. நெருக்கத்திலே உம்மை கூப்பிட்டேன் நெருங்கி வந்தீரன்றோ (2)
என் குறைகளெல்லாம் மாற்றினீரே நிறை வாரன பெலன் தந்தீரே (2)
3. உண்மை இல்லா என்னையும் உண்மையாய் நேசித்தீரே (2)
உம் ஆவி தந்து வரங்கள் தந்தீர் உமக்கே நன்றி ஐயா (2)