thooyavan siluvaiyil thongkuvathoo

தூயவன் சிலுவையில் தொங்குவதோ
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

தூயவன் சிலுவையில் தொங்குவதோ
இறை நீதியின் இறகுகள் முறிந்தனவோ
ஆதிக்க ஆணிகள் துளைத்தனவோ
ஒரு மாசறு தேவன் மடிந்திடவோ
பல்லவி
இதயம் இழந்தது மனிதம்
இங்கு குருதி சிந்துது தெய்வம்
சதிகள் சூழ்ந்திடும் நேரம்
இங்கு பரமன் உயிர் விடும் கோலம்
பரமன் உயிர் விடும் கோலம்
இதயம் இழந்தது மனிதம்
இங்கு குருதி சிந்துது தெய்வம்
சரணம் – 1
இரக்க தீபம் முகத்தில்
ஏந்தும் இயேசு திருமகனை
ஒரு மரத்தில் அறைந்து உருவம் சிதைத்து
கொல்லும் ஞாயமென்ன?
அருளை பொழிந்து இருளை நீக்கும்
வள்ளல் நாயகனை
கூர் ஈட்டியாலே குத்தி பிளக்கும்
கொடுமை என்ன சொல்ல
நீதி சாய்ந்ததோ … … ஜோதி மறைந்ததோ
சாவை வீழ்த்திடவே சாவை ஏற்றனயோ?
இதயம் இழந்தது மனிதம்
இங்கு குருதி சிந்துது தெய்வம்
சரணம் – 2
ஆணி துளைத்த மனித கரங்கள்
உன்னைத் தாங்கியதோ !
சிலுவையோடு பிணைத்த உன்னை
ஊனமாக்கியதோ !
வடிவை இழந்த தெய்வ முகமோ
வெறுமை ஏற்றதுவோ
இனி இந்தக் கோலம் வந்திடாமல்
உலகைக் காத்ததுவோ
சிலுவை பெருமை அன்றோ ?
எங்கள் வழியும் அதுவன்றோ?
வாழ்வின் நாயகனே
இறை வாழ்வும் எமதன்றோ
இதயம் இழந்தது மனிதம்
இங்கு குருதி சிந்துது தெய்வம்
சரணம் – 3
வஞ்சம் எங்கும் மிஞ்சும் உலகில்
வாஞ்சை சுடரானாய்
பொய்யும் புரட்டும் மிஞ்சும் மனதில்
உண்மை விளக்கானாய்
பொறுமை விதையை நெஞ்சில் தூவி
இனிய உறவானாய்
எம் சிறுமை நீக்கும் அமைதி வேந்தே
எங்கள் பரிசானாய்
மீட்பன் நீயன்றோ எம் தோழன் தானன்றோ
துன்பம் உனதன்றோ எம் மீட்பும் உமதன்றோ
இதயம் இழந்தது மனிதம்
இங்கு குருதி சிந்துது தெய்வம்
சதிகள் சூழ்ந்திடும் நேரம்
இங்கு பரமன் உயிர் விடும் கோலம்
பரமன் உயிர் விடும் கோலம்
இதயம் இழந்தது மனிதம்
இங்கு குருதி சிந்துது தெய்வம்