thoozhane un jeevan – Thozhanae Un Jeevan

தோழனே உன் ஜீவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தோழனே உன் ஜீவன் – Thozhanae Un Jeevan
1.தோழனே உன் ஜீவன், இங்கே
என்றென்றைக்கும் நிற்குமோ?
தோன்றிப்போகும் புகைபோல்
அது நீங்கும் அல்லவா?
ஆயுள் நாளை
நீ ஆதாயம் பண்ணிக்கொள்.
2.இவ்வுலகில் உள்ள பொருள்
நிலையாமல் நீங்குமே;
பரலோக பொக்கிஷங்கள்
என்றென்றைக்கும் நிற்குமே;
திடன் கொண்டு
அவையே நீ தேடிக்கொள்.
3.மாந்தர் மேன்மை மேட்டிமைகள்
புல்லைப் போல உலர்ந்துபோம்,
லோகக் கல்வியோசனைகள்
சீக்கிரம் ஒழிந்துபோம்;
பெலவானும்
பெலனற்றவன் ஆவான்.
4.தேக சொஸ்தமுள்ளவர்கள்
நினையா நேரத்திலே
இம்மை விட்டுப் போகிறார்கள்;
இதை எண்ணி, தோழனே
சாவுக்கென்று
பக்தியோடு காத்திரு.
5.சாவின்மேலே ஜெயங்கொண்ட
பாவ நாசர் பாதத்தை
தஞ்சமென்று வந்தடைந்த
ஆத்துமாவின் பயத்தை
அவர் நீக்கி
நீங்கா வாழ்வை ஈகுவார்.