1.thukkam kontata varayoo

துக்கம் கொண்டாட வாராயோ
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.

1.துக்கம் கொண்டாட வாராயோ ,
ஆ யேசு ஜீவனை விட்டார்
திகில் கலக்கம் கொள்ளாயோ
மீட்பர் சிலுவையில் மாண்டார்.
2.போர் வீரர், யூதர் நிந்தித்தும்,
மா சாந்தமாய்ச் சகித்தார்
நாமோ புலம்பி அழுவோம்;
இயேசு சிலுவையில் மாண்டார்.
3.கை காலை ஆணி பாய்ந்ததே,
கொடூர தாகம் அடைந்தார்;
மெய் தொய்ந்ததால் கண் இருண்டே ;
இயேசு சிலுவையில் மாண்டார்.
4.மும்மணி நேரம் மாந்தர்க்காய்,
தம் மெளனத்தாலே கெஞ்சினார்;
நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே
இயேசு சிலுவையில் மாண்டார்.
5.சிலுவையண்டை வந்து சேர்,
நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;
ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;
இயேசு சிலுவையில் மாண்டார்.
6.உருகும் நெஞ்சும் கண்ணீரும்
உள்ளன்பும் தாரும், இயேசுவே;
மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்
நீர் சிலுவையில் மாண்டீரே!