thulangkitave thooyan thiru – Thulangidave Thooyan Thiru

துலங்கிடவே தூயன் திரு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துலங்கிடவே தூயன் திரு – Thulangidave Thooyan Thiru
பல்லவி
துலங்கிடவே தூயன் திரு நாமமே
இலங்கிடுதே சேனை ஆலயமே
இனிதுடன் திகழுமித் தினமிதிலே
கனிவுடன் எழுந்திடுவீர்!
அனுபல்லவி
ஆலயமே! நம் ஆனந்தமே – வல்ல
அற்புத தேவனின் மாளிகையே
பாவிகளின் நல் புகலிடமே
பரிசுத்த அலங்காரமே
சரணங்கள்
1. சாலொமோன் ஆலயம் சிறந்திடவே
சகல மகிமையும் நிறைந்திடவே
மேகம் போல் வந்தவா! வல்லமையாய்
இவ்வாலயம் சிறந்திட வா! – ஆலயமே
2. துதித்திடுவோம் நம்மில் வசித்திடுவார்
பசிதாகம் இனியில்லை மேய்த்திடுவார்
ஜீவத் தண்ணீரண்டை நடத்திடுவார்
கண்ணீரைத் துடைத்திடுவார் – ஆலயமே
3. ஆலயத்தை பாதுகாத்திடுவோம்
அளவிலா நன்மைகளடைந்திடுவோம்
உறுதியான தூணாய் நிலைத்திடுவோம்
பயத்துடன் பணிந்திடுவோம் – ஆலயமே
4. வானாதி வானங் கொள்ளாத தேவா! இவ்
வாலயம் உமக்கொரு தாபரமே
வாசங் கொள்வீர் எம துள்ளத்திலே
வந்திடுவீர் இயேசுவே! – ஆலயமே
துலங்கிடவே தூயன் திரு பாடல் வரிகள், Thulangidave Thooyan Thiru Lyrics