Thunai nindru Yuththangalai seibavarae song lyrics

துணை நின்று யுத்தங்களை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துணை நின்று யுத்தங்களை செய்பவரே
துணையாக எப்பொழுதும் இருப்பவரே
என்னை ஆதரிக்கும் என் தெய்வமே
எனக்காக யாவையும் செய்பவரே
அல்லேலூயா உமக்கே
ஆராதனை உமக்கே
ஆனந்த துதிபலி செலுத்திடுவேன்
உற்சாகமாகத் துதித்திடுவேன்
1.பெலனும் அடைக்கலமும் நீரே
ஆபத்தில் அநுகூல துணையே-2
பூமி நிலைமாறி மலைகள் பெயர்ந்து
பர்வதங்கள் அதிர்ந்தாலும்
அசையாத தேவனுண்டு -2
2.சர்வ வல்ல தேவன் நீரே
சேனைகளின் கர்த்தர் என் துணையே-2
சத்துருக்கள் கூடி சதி திட்டம் தீட்டி
அழிக்க முயன்றாலும் பாதுகாக்கும் தேவனுண்டு-2