thunmaarkkar aalosanai

துன்மார்க்கர் ஆலோசனை நடவாதவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துன்மார்க்கர் ஆலோசனை நடவாதவன்
பாவிகள் வழியில் நில்லாதவன்
பரியாசக்காரரோடு அமராதவன் - அவன்
வேதத்தை என்றும் தியானிப்பவன்
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (2)
அது ஆண்டவரின் ஆசீர்வாதமே
நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்டு
காலத்தில் கனியை தருகின்ற
இலையுள்ள மரம் போல் இருப்பவன்
அவன் வேதத்தை என்றும் தியானிப்பவன்
3. பிதாவை என்றும் நம்பிடுவான்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவான்
ஆவியின் வழியில் நடந்திடுவான்
அவன் வேதத்தை என்றும் தியானிப்பவன்