thunpa alai vanthalum

துன்ப அலை வந்தாலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துன்ப அலை வந்தாலும்
போராட்டப் புயல் வந்தாலும்
இயேசு சாமி எங்களையே
கண்மணிபோல் காத்திடுவார்
எதிர்ப்புண்டு எல்லாப் பக்கம்
சாத்தான் சேனை எதிர்க்கும் பக்கம்
தூதர் சேனை எதிர்க்கும் பக்கம்
இயேசு சாமி எங்கள் பக்கம்
அல்லேலூயா, ஜலேசா
அல்லேலூயா, ஜலேசா
அல்லேலூயா, ஜலேசா
அல்லேலூயா, ஜலேசா
எங்கள் இராஜா இயேசு இராஜா
எங்கள் கொடி சிலுவைக் கொடி
எங்கள் ராஜ்யம் பரலோக ராஜ்யம்
எங்கள் கோஷம் அல்லேலூயா
எங்கள் வேலை மனுஷரையே
பிடிக்கும் பெரிய வேலை
எங்கள் நோக்கமெல்லாம்
ஆத்தும ஆதாயமே
எப்பக்கம் நெருக்கினாலும்
நாம் ஒடுங்கிப் போவதில்லை
கலக்கமடைந்தாலும்
மனமுறிவடைவதில்லை
துன்பமடைந்தாலும்
கைவிடப்படுவதில்லை
கீழே விழுந்தாலும்
மடிந்து நாம் போவதில்லை
உற்றார் பெற்றார் விடுவோம்
மனைவி பிள்ளை மறப்போம்
வீடு நிலம் துறந்திடுவோம்
நூறத்தனை பெற்றிடுவோம்
நிந்தை அடி சகித்திடுவோம்
கட்டுக்காவல் பார்த்திடுவோம்
ஜீவன் கூட ஈந்திடுவோம்
ஜீவ கிரீடம் பெற்றிடுவோம்