Thunpam Unnai Szhnthalaik

துன்பம் உன்னைச் சூழ்ந்தலை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

1. துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணிச் சோர்ந்தாலும்
எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
பல்லவி
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்யங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்,
ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்,
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
2. கவலை, சுமை, நீ சுமக்கும் போது
சிலுவை உனக்குப் பளுவாகும் போது,
எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்
3. அகோரத் துன்பங்கள் ( அநேக துன்பங்கள் ) உன்னைச் சூழ்ந்தாலும்
அதைர்யப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னைத் தேற்றுவார் பிரயாணத்தில் – எண்
4. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது,
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
பணங் கொள்ளா பேராசீர்வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார். – எண்