Thuthi Ganam Seluthukirom

துதி கனம் செலுத்துகிறோம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதி கனம் செலுத்துகிறோம்
திரியேக தேவனுக்கே
ஆராதனை நாயகரே
என்றென்றும் புகழ் உமக்கே (2)
பரிசுத்தரே பரம பிதாவே பரலோக ராஜாவே
இருள் ஏதும் பாவமேதும் இல்லாத தூயவரே
பேரறிவும் ஞானமும் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே
யோசனையில் பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே
சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே
நீதியோடும் நிதானத்தோடும் நியாயங்கள் தீர்ப்பவரே
என்னுயிராய் இருப்பவர் நீரே என் பெலன் சுகம் நீரே
என் வழியே சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்