Thuthippen Yesuvin Paatham Thuthikka

துதிப்பேன் இயேசுவின் பாதம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதிப்பேன் இயேசுவின் பாதம் – Thuthipean Yesuvin Paatham
கண்ணிகள்
துதிப்பேன் இயேசுவின் பாதம்
துதிக்கப்பெறும் அற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் -2
வணங்குவேன் அவர் பாதம் வீழ்ந்து நான் – துதி
1.பேயின் தலை மிதித்தவர்
நோயின் பெலன் அழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன்
போற்றுவேன் இயேசு தேவசுதனை – துதி
2.வானம் பூமியுமடங்கா
வல்ல அற்புதரானதால்
அற்புதர், அற்புதர், அற்புதர்,
அவர் நாமமே அதைத் – துதி
ஜே! ஜே! ஜெயக்குமாரனும்
ஜெயம் பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே, ஜொலிப்பாரே,
ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் – துதி
தூதர் கூட்டங்கள் போற்றும்
தூய சுந்தரராமிவர்
மகத்துவமே, மகத்துவமே, மகத்துவமே
அவர் ராஜ்யமென்றைக்கும் – துதி
செல்வேன் இயேசுவின் பாதம்
சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன், மகிழுவேன், மகிழுவேன்,
அவர் வார்த்தையிலென்றும் – துதி