thuthiyil thaevaa varuvaay

துதியில் தேவா வருவாய் நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதியில் தேவா வருவாய்
நான் துதித்துத் துதித்து
உம்மைப் பாடி மகிழ்ந்திடவே
துதியில் தேவா வருவாய்
தூயவர் கோனே துணைபுரிமானே
தூய்மை கிடைக்குமென்று
துதிக்கிறேன் நானே
1.துன்பம் இந்நேரம் உம்மைத் தொடரத்
தொடரப் பேயின் கோபம் மிகுந்திடுதே
துன்பம் இந்நேரம்
இன்பம் மிகுதே தம்பிரான் பாதம்
கெம்பீரம் பாடி அம்பரமேக
2.கலங்குதே இந்நேரம் என் கலமும்
துலக்கமின்றி மயங்கித் தியங்குகிறேன்
கலங்குதே இந்நேரம்
காடி தான் தேனோ கல்வாரி மலையில்
கருதுவோர் பருகும் கானாவூர் ரசமே
3.அகமே வரந்தருவாய் நான் அல்லும்
பகலும் உம்மைப் பாடி மகிழ்ந்திடவே
அகமே வரந்தருவாய்
தியாகஞ் செய்யவே ஏகோவாபாதம்
தாகம் மிகுந்தேன் ஏழையிந்நேரம்
4.ஆறு லட்சம் பேரில் நடு உதித்து
உதித்துச் சென்ற அதிரூப கொரூபா
ஆறு லட்சம் பேரில்
கூறினீரல்லோ கூடியிருக்கக்
கொற்றவர் சேவை குறைவின்றி ஒழுக
5.மகிபன் இயேசு துரையே நான் மகிழ்ந்து
மகிழ்ந்து தினம் பாடித்துதித்து வரும்
மகிபன் இயேசு துரையே
மங்கையர் கானம் மாசில்லாதல்லோ
தங்கப் பொன்னேசு சர்வாதிகாரா