thuyaathi thooyavarae natkunasingham timothy thooyavare

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தூயதி தூயவரே துதிகளிலே மகிழ்பவரே
துதியில் வாசம் செய்யும் தூயவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா
உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா
கேருப்பின்கள் நடுவினிலே
வாசம் செய்பவரே
நித்தமும் புகழ் பாடத்தக்கவரே
தூதர்கள் போற்றிடும் தூயவரே
சேரக்கூடா ஒளிதனிலே
வாசம் செய்பவரே
நித்திய ஆனந்தமே பேரின்பமே
மங்காத பிரகாசமே ஸ்தோத்திரம்
மனுஷருக்குள் வாசம் செய்ய
வரங்கள் பெற்றவரே
பரிசுத்த ஆலயத்தில் இருப்பவரே
சேனைகளின் கர்த்தாவே பரிசுத்தரே