Udainthu Pona Ennaiyum Lyrics

உடைந்து போன என்னையும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உடைந்து போன என்னையும்
உருவாக்கிய தெய்வமே
தளர்ந்து போன என்னையும்
தாங்கி பிடித்த தேவனே
உம்மை பாடாமல் இருக்க முடியுமா
உம்மை உயர்த்தாமல் இருக்க முடியுமா-2
1.தனியே நிற்பதால் தள்ளுவது எளிதென்று
நினைத்த சத்ருக்கள் மத்தியிலே என் தேவன்-2
தாங்கி பிடித்தாரே தயவால் காத்தாரே
தலையை நிலையாய் என்னாளும் வைத்தாரே
உம்மை பாடாமல் இருக்க முடியுமா
உம்மை உயர்த்தாமல் இருக்க முடியுமா
2.குயவன் கையிலே களிமண் கெட்டதென்று
நகைத்த சத்ருக்கள் மத்தியிலே என் தேவன்
மீண்டும் எடுத்தாரே வனைந்து வைத்தாரே
ராஜாக்கள் மத்தியிலே அமர செய்தாரே
உம்மை பாடாமல் இருக்க முடியுமா
உம்மை உயத்தாமல் இருக்க முடியுமா