Ulagai Marakkanum Lyrics

உலகை மறக்கணும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உலகை மறக்கணும்
உம்மையே நோக்கனும் (2)
உம் பாதம் அமர்ந்து
உம் தோளில் சாய்த்து
உம் அழகை ரசித்திடனும்
உம் அன்பை ருசித்திடனும் – இயேசய்யா
உம் அன்பை ருசித்திடனும் – உலகை
விண்ணப்பம் செய்தேன்
அதையே நான் நாடுவேன்
உம் இல்லத்தில் வாழ்ந்திடனும்
என் வாழ்நாளெல்லாம் குடியிருக்கணும் – 2
திருப்பாதம் அமர்ந்து
திரு சித்தம் அறிந்து -(2)
அதையே நான் நிறைவேற்றனும்
சுய சிந்தைக்கு மடிந்திடனும் – உலகை
அப்பா உம் சமூகம் நிறைவான மகிழ்ச்சி
வலப்பக்கம் பேரின்பமே எப்போதும் பேரின்பமே
நீரே என் சொத்து நீரே என் கிண்ணம் -(2)
எனக்குரிய பங்கும் நீரே உமையன்றி வேறில்லையே – உலகை
உலகென்னை மறந்தாலும்
உறவென்னை வெறுத்தாலும்
என்னுலகம் நீர்தானையா
என்னுறவும் நீர்தானையா-(2)
தாயும் நீரே
தகப்பனும் நீரே
மணவாளன் நீரே துணையாளன் நீரே
என் ஆன்ம நேசர் நீரே
வாழ்வில் எல்லாமும் நீர் மாத்ரமே – உலகை