1.ulaka inpam, vetikkai

உலக இன்பம் வேடிக்கை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.உலக இன்பம், வேடிக்கை
செல்வமும் எனக்கு வேண்டாம்;
பரம நன்மை ஒன்றுமே
இங்கில்லை, யாவும் மாயையாம்;
பொருளல்லாததை நாடேன்,
நான் யேசுவைச் சிநேகிப்பேன்.
2.உலக வாழ்வு ஒழியும்;
சரீரம் அழகற்றுப்போம்,
நரரின் வேலை அழியும்,
இவ்வுலகமும் வெந்துபோம்;
பொருளல்லாததை நாடேன்,
நான் யேசுவைச் சிநேகிப்பேன்.
3.இயேசுவின் ஆளுகை என்றும்
அழிந்துபோக மாட்டாதே,
அவரது சிம்மாசனம்
விழாமல் என்றும் நிற்குமே;
பொருளல்லாததை நாடேன்,
நான் யேசுவைச் சிநேகிப்பேன்.
4.நான் இங்கே தங்கும் நாள் எல்லாம்
துயரம் நீங்க மாட்டாதே,
பரத்தில் போன பின் உண்டாம்
மகிமை செல்வம்; பூரிப்பே;
பொருளல்லாததை நாடேன்,
நான் யேசுவைச் சிநேகிப்பேன்.
உலக இன்பம் வேடிக்கை பாடல் வரிகள், Ulaga Inbam Veadikkai lyrics