um anbaal en ullam nirambi

உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி வழிய செய்திடும்
உம் அன்பை எந்நாளும் என் உள்ளம் உணர்ந்திடும்
உம் அன்பின் குரல் என்றும் என் காதில் தொனிக்கட்டும்
நீர் பேசும் வார்த்தைகள் என் மனதில் பதியட்டும்
ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மையே ஆராதிப்பேன் – 2
2. என் உள்ளந்திரியங்கள் ஆராய்ந்து அறிந்திடும்
உம் வார்த்தை என் உள்ளம் மாற கிரியை செய்யட்டும்
நம்பிக்கை இல்லாமல் உள்ளம் வாழும் போதிலும்
உம் வாக்குகள் என்றென்றும் என்னை ஆற்றி தேற்றிடும்
3. என் கண்கள் என்றென்றும் உம்மை நோக்கி பார்த்திடும்
என் இதயம் என்றென்றும் உம்மையே நம்பிடும்
உம் வழியை எந்நாளும் நான் நடந்திட செய்திடும்
உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேற உதவிடும்