um kirupai poothume

உம் கிருபை போதுமே எனை மீட்ட

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் கிருபை போதுமே
எனை மீட்ட இரட்சகனே
மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
உம் கிருபை மாறாதே
நெருக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன்
நிலையில்லாமல் நான் நடந்திட்டேன்
உருக்கமாய் என்னைத் தேடி வந்து
எந்தன் நிந்தை மாற்றினீரே
கைவிடப்பட்டு சோதனையிலே
கண்ணீர் சிந்தி கதறினேன்
சொந்த ஜீவனை எனக்கு தந்து
உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே
வழியறியாத பாதையிலே நான்
தவறிப்போன வேளையிலே
செழிப்பான வழியை காணச்செய்து
சத்திய வழிதனில் நடத்தினீரே
உம் கிருபை போதுமே எனை மீட்ட பாடல் வரிகள், Um Kirubai Pothumae Enai Meetta Lyrics