um kootara maraivil – Um Koodaara Maraivil

உம் கூடார மரைவில்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் கூடார மரைவில் – Um Koodaara Maraivil
உம் கூடார மறைவில்
என்னை ஒளித்து வைத்தீர்
உம் உள்ளங்கையில்
என்னை வரைந்து வைத்தீர்
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகளுக்காய் – 2
1.கடந்து வந்த பாதைகளில்
கடினங்கள் பல தாண்ட உதவி செய்தீர்
கலங்கி நின்ற காலங்களில்
கலக்கங்கள் நீக்கி மகிழவைத்தீர்
நீரின்றி நான் இல்லையே (இயேசுவே)
உம் துணையின்றி நான் இல்லையே -2
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகளுக்காய் – 2
2.எனக்கெதிராய் உருவான ஆயுதங்கள்
வாய்க்காதது உம் கிருபையே
எனக்கெதிராய் எழும்பின நாவுகள்
தளர்ந்ததும் உம் கிருபையே
தாயினும் மேலாகவே என்னை காத்தவரே
தந்தையினும் மேலாகவே என்னை சுமந்தவரே – 2
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகளுக்காய் – 2
உம் கூடார மரைவில்
என்னை ஒளித்து வைத்தீர்
உம் உள்ளங்கையில்
என்னை வரைந்து வைத்தீர்
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகளுக்காய் – 3